மோடி -அமித்ஷா காலில் ஸ்டாலின்.. பாஜகவுக்கு வேலை செய்ய திமுக டெல்லிக்கு வரிசை காவடி.. ஜெயக்குமார் ஆணவப் பேச்சு.

Published : Apr 01, 2022, 01:04 PM ISTUpdated : Apr 01, 2022, 01:12 PM IST
மோடி -அமித்ஷா காலில் ஸ்டாலின்.. பாஜகவுக்கு வேலை செய்ய திமுக டெல்லிக்கு வரிசை காவடி.. ஜெயக்குமார் ஆணவப் பேச்சு.

சுருக்கம்

திமுகவினர் எப்போதும் இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள் என்றும், பிஜேபிக்கு வேலை செய்ய ஒருவர் பின் ஒருவராக வரிசை காவடி எடுப்பது போல் திமுகவினர் டெல்லி சென்று கொண்டிருக்கின்றனர் என்றார்.  

பாஜகவுக்கு வேலை செய்வதற்காக திமுகவினர் டெல்லிக்கு வரிசை காவடி எடுக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவை ஒழிப்பதற்கு திமுக காவல்துறையை பயன்படுத்துகிறதே தவிற சட்ட ஒழுங்கை காப்பாற்ற அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும்,  நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்தல் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் இரு கட்சிகளும் மாறிமாறி திமுகவை விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் டெல்லியில் திமுகவின் (அண்ணா கலைஞர்) அறிவாலயம் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த சந்திப்பை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா குறித்து அவதூறாக பேசி வந்த ஸ்டாலின் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக பாஜக தலைவர்களை சந்திக்கிறார். என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை இராயபுரம் N1 காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நான்காவது  நாளாக இன்று  நிபந்தனை கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- திமுக பெண் கவுன்சிலரின் கணவர் காவலர்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டியதற்காக திமுக சார்பில் அவரை கட்சியிலிருந்து  நீக்கம் செய்தது கண்துடைப்பு நாடகம் என்றும், அவரின் பேச்சைக் கட்சி நிர்வாகிகளே கேட்பதில்லை என்றும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை திமுகவினரே நின்று வெற்றி பெற்றதே அதற்கு சாட்சி என்றும் கூறினார். திமுகவினர் எப்போதும் இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள் என்றும், பிஜேபிக்கு வேலை செய்ய ஒருவர் பின் ஒருவராக வரிசை காவடி எடுப்பது போல் திமுகவினர் டெல்லி சென்று கொண்டிருக்கின்றனர் என்றார்.

கடந்த பத்து மாதத்தில் திமுக ஆட்சியில் குடும்பத்தினர் செய்த ஊழலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலின் டெல்லி சென்று மோடி அமித்ஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றுள்ளனர் என்றார். இதேபோல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழக அரசு அதற்கான சரியான வாதத்தை எடுத்து வைக்காததே இந்த  நிலைமைக்கு  காரணம் எனக் கூறினார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனையாவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சியில் காவல்துறையை அதிமுகவினரை ஒழித்துக்கட்ட பயன்படுத்துகின்றறரே தவிர சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அல்ல என்றும் அவர்  விமர்சித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!