
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பி விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, பெரம்பூர் ரயில்வே ஆடிட்டோடிரயத்தில் இருந்து ரயில் நிலையம் நோக்கி திமுக பொருளாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஊர்வலத்தன்போது, திமுக கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கவிட்டடனர். அப்போது ஊர்வலமாக சென்ற மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், சேகர்பாபு, தாயகம் கவி, ரெங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் விவசாயிகளுடன் இணைந்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் - கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹவுரா விரைவு ரயிலை அவர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸ் கைது செய்தது.
சென்னை, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். ரயில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தமாகாவினர் ஊர்வலகமாக சென்றனர்.