அரை மணி நேரத்தில் முடிந்த அறப்போராட்டம் - ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது

 
Published : Feb 18, 2017, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
அரை மணி நேரத்தில் முடிந்த அறப்போராட்டம் - ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது

சுருக்கம்

காலை 10 மணியிலிருந்து அமளிக்காடாகி போனது சட்டப்பேரவை. ஓபிஎஸ் குரூப்பும், மு.க ஸ்டாலின் தரப்பில் திமுகவினரும் செய்த அட்டகாசங்களால் ஆடிப்போனார் சபாநாயகர் தனபால்.

ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அமைதியாகி விட அடங்காத திமுகவினர் தொடர்ந்து அமளி செய்து வந்தனர்.

2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்ட பிறகும் பிரச்சனை தொடந்து கொண்டே இருந்ததால் திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கந்தல் கோலமாகி வெளியே அழைத்து வரப்பட்டார் எதிர்கட்சி தலைவர ஸ்டாலின்.தன் சட்டை பாக்கெட் கிழிக்கப்பட்டு, சட்டை பொத்தான்கள் பிடுங்கப்பட்டு உள்ளே அணிந்திருந்த பனியன் தெரியும்படி கிழிந்த சட்டையோடு நடந்து வந்தார் ஸ்டாலின்.

தன்னை சரமரியாக காவல்துறையினர் தாக்கியதாகவும் அதுவும் இணை ஆணையர் ஷேஷசாயி உத்தரவின் பேரில் தன்னை தாக்கிய காவலர்கள் ஷூ காலால் எட்டி உதைத்து தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டு சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

சபாநாயகரின் ஒரு தலைபட்சமான இந்த முடிவை எதிர்த்து ஸ்டாலின் மெரீனாவில் அறப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஏரளமான தொண்டர்கள் மெரீனாவில் திரண்டனர்.

தயாநிதி மாறன், கனிமொழி, உள்ளிட்டோர் மெரில் வந்து உடன் அமர்ந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய நூற்றுக்கணக்கான போலீசார் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு