
நாங்கள் 3 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் 30 அதிகாரிகளை மாற்றுகிறது. இது வரவேற்கத்தக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:-
ஆர்கே நகரில் அதிகாரிகள் மாற்றம் வரவேற்கத்தக்கது. நாங்கள் 3 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் எதிரொலியாக 30 அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, பேச வேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று, பிரதமரை சந்திக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை, அவருக்கு எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுத்த வலியுறத்த வேண்டும்.
தமிழக அரசு மட்டும் தன்னிச்சையாக நின்று விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க முடியாது. மக்களை பற்றி, தமிழக அரசுக்கு கவலையே இல்லை. அது தமிழக அரசால் நிச்சயம் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்னையை தீர்க்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது. மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.