
தன்னை விமர்சித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ஸ்டாலின்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உடனடியாக முதல்வராக ஸ்டாலின் துடிப்பதாகவும் அவரது மனம் பேதலித்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
பொள்ளாச்சி ஜெயராமனின் விமர்சனம் குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்லி தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என ஸ்டாலின் தெரிவித்துவிட்டார்.