அப்படி செய்தால் விளைவு எப்படியிருக்கும் தெரியுமா? ஸ்டாலினை டென்ஷானாக்கும் அளவிற்கு அப்படி என்ன பண்ணார் திருமா?

By sathish kFirst Published Dec 1, 2018, 8:49 PM IST
Highlights

ஸ்டாலினை ஒரு கரையில் நிறுத்தி, மறு கரையில் வைகோ மற்றும் திருமாவை நிறுத்தி வைத்து நட்ட நடுவில் துரைமுருகன் கொளுத்திய அதிரடி சரவெடி அரசியல் பட்டாசின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் இப்போது திருமாவளவன் அடித்திருக்கும் ஒரு கமெண்ட், ஸ்டாலினையே அதிர வைத்திருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம். 

அப்படி என்ன பேசிவிட்டார் திருமா?...

’எங்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க.வுக்கு இடையில் இருப்பது நட்புதான். இதுவரையில் கூட்டணி உருவாகவில்லை.’ என்று துரைமுருகன் ஒரு பகீர் ஸ்டெட்மெண்டை விடுத்ததும் திருமாவும், வைகோவும் அடுத்தடுத்து ஓடோடி வந்து அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர். 

ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமா கூட்டணி உறுதி எனும் ரீதியில் பேசினார், வைகோவோ வேறு வகையில் நம்பிக்கை தெரிவித்துச் சென்றார். இந்நிலையில், இப்போது திருமாவளவன் உதிர்த்திருக்கும் ‘விஷப்பரீட்சை’ ஸ்டேட்மெண்ட்தான் அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மீண்டும் பிளவு அதிர்வை உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள். 

அதாவது திருமா “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து களமிறங்கும் முடிவில் இருப்பதாகவும், அதனால்தான் அது  கூட்டணி பற்றியெல்லாம் பெரிதாய் யோசிக்கவில்லை! என்றும் கருத்துக்கள் வந்து  விழுகின்றன. 

இந்த விஷயத்தில் ஒன்றை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, தனித்து நின்றால் தி.மு.க. ஜெயிக்கலாம்! என்பது ஒருவேளை உண்மையாக கூட இருக்கலாம். அது வேறு கதை. 
ஆனால், அது ஒரு விஷப்பரீட்சை. காரணம், தேர்தல் முடிவுகள்  ஒருவேளை எதிர்மறையாக போய்விட்டால் எல்லாம் கெட்டுவிடும். மீண்டும் மதவாதம் தலைதூக்கிவிடும். இதற்கு அவர்களே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த கதையாகிவிடும். 

ஆனால் எனக்கு தெரிந்த வரையில், கூட்டணி வைப்பதில் ஸ்டாலினுக்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களைப் பங்கிட்டு கொடுக்கும் எண்ணிக்கை விஷயத்திலும், யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது? என்பதிலும்தான் தி.மு.க.வுக்கு சில தயக்கங்கள் இருக்கும்! என நினைக்கிறேன். மற்றபடி அவர்கள் கூட்டணி முடிவில்தான் அவர்கள் இருக்கிறார்கள், கூட்டணி தோழமைகளை நாம் இழக்கவேண்டாம்! என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்றும் உணருகிறேன்.” என்று சொல்லியிருந்தார். 

திருமாவின் இந்த சுற்றி வளைத்து...கடைசியில் ‘தனித்து நிற்பது விஷப்பரீட்சை’ எனும் கமெண்ட்தான் ஸ்டாலினை எரிச்சல்படுத்தியுள்ளது! என்கிறார்கள். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வைத்திருந்த செல்வாக்கை விட மூன்று நான்கு மடங்கு இப்போது நாம் வைத்திருக்கிறோம்! ஆக நாம் தனித்து நின்றால் ஜெயிக்க மாட்டோமா என்ன? என்கிறாராம் ஸ்டாலின்.

click me!