
94 ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா ஸ்டாலினும், துரை முருகனும் அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் வழங்கினர்
சென்னையில் வரும் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவுக்கான அழைப்பிதழை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை முருகன் ஆகியோர், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியிடம் நேரில் வழங்கினர்.
வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் வருகிறது.
அதோடு கருணாநிதி சட்டமன்றத்தில் தனது பணியைத் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்தததைக் கொண்டாடும் வகையில், பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தி விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், சீத்தாராம் யெச்சூரி, நாராணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசவுள்ளனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக செய்து வருகிறது. இதற்கான அழைப்பிதழை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், அக்கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை முருகனும், கருணாநிதியிடம் வழங்கினர்.
கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழாவாக இந்த விழா நடைபெற்றாலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜகவுக்கு எதிராக எதிர் கட்சிகளை ஒன்றினைக்கும் விழாகவே கருதப்படுகிறது.