"பொன்னாரும் , தமிழிசையும் முதலில் வாஜ்பாயிடம் சென்று கேட்டு வாருங்கள்" - மு.க.ஸ்டாலின் காட்டம்

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 03:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
"பொன்னாரும் , தமிழிசையும் முதலில் வாஜ்பாயிடம் சென்று கேட்டு வாருங்கள்" - மு.க.ஸ்டாலின் காட்டம்

சுருக்கம்

அனைத்து கட்சி கூட்டம் முடித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலினிடம் காவிரி பிரச்சனையில் திமுக ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாமல் இப்போது அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிறார்கள் என்று வைகோ பேசியது பற்றி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர் , வைகோ கூட்டத்திற்கு வரக்கூடாஅது என முடிவு செய்து விட்டு பிறகு குற்றம் சாட்டுகிறார். அவரும் திமுகவில் இருந்திருக்கிறார். 18 ஆண்டுகள் எம்பியாக இருந்துள்ளார். அவருக்கு உண்மை என்னன்னு தெரியும் என்று கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர் தமிழிசை சௌந்தரராஜன் , பொன்னார் போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசி வருகிறார்கள் சகோதரி தமிழிசை சகோதரர் பொன்னாருக்கு நான் சொல்வது வி.பி.சிங் ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி முயற்சியால் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. வாஜ்பாய் உங்களுடன் தான் இருக்கிறார் அவரிடம் சென்று என்னென்ன செய்தோம் என்று கேட்டுவிட்டு வந்து பேசுங்கள் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாஅலின் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Cockroach Janta Party : ஒரு தலைமுறையின் கோபத்திற்கு 'கரப்பான் பூச்சி' என்று பெயர்!
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!