அதிமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியிருந்தாலும் கலந்துகொண்டிருப்போம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 02:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
அதிமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியிருந்தாலும் கலந்துகொண்டிருப்போம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

சுருக்கம்

காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைவரும் இணைந்து போராட சூளுரை ஏற்போம் என தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டதாகக் கூறி திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைவரும் இணைந்து போராட சூளுரை ஏற்போம் என்றார். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் நன்றி கூறிய மு.க.ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் அடுத்து நம்மோடு இணைந்து செயல்படுவார்கள் என்றும் பேசினார்.

அனைத்து கட்சி கூட்டம் திமுகவின் கூட்டமல்ல என்றும் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிட நடத்தப்படும் கூட்டம். விவசாயிகள் நலன், உரிமை பாதுகாப்புக்காக இது நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

அனைத்து கட்சி கூட்டத்தைக் வேறு யாரும் கூட்ட முன் வராததால் திமுக முன் வந்துள்ளதாகவும் கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக அரசு கூட்டியிருந்தாலும் அதில் திமுக பங்கேற்றிருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார். தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதை கடமையாகக் கருதி இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்றார்.

கர்நாடகா மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் கூட ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கின்றன, ஆனால் திமுக மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சில காட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார். கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், காவிரி நதி நீர் பிரச்சனையில் எப்போதும் இணைந்தே போராடுவோம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
இரண்டாவது முறையாக அப்பாவான சீமான்.! ரசிகர்கள் வாழ்த்து மழை.!