திருமாவைத் தோற்கடிக்க, ராமதாசு தினமும் அறிக்கை விட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்... அதிரவைக்கும் முகநூல் பதிவு!!

By sathish kFirst Published May 27, 2019, 8:02 PM IST
Highlights

அமெரிக்காவில் இருக்கும் மயிலாடுதுறை சிவா என்பவர் தீவிர திமுக ஆதரவாளர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் தீவிர திமுக ஆதரவாளர். அவர் திருமாவின் வெற்றி குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.  

அமெரிக்காவில் இருக்கும் மயிலாடுதுறை சிவா என்பவர் தீவிர திமுக ஆதரவாளர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் தீவிர திமுக ஆதரவாளர். அவர் திருமாவின் வெற்றி குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.  

அதில், “உலகம் முழுக்க உள்ள தமிழ் ஆர்வலர்கள் அண்ணன் தொல்.திருமா வெல்ல வேண்டும் என்று தொடர்ந்து செய்திகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டும், சாதிக்கு அப்பாற்பட்டும் அண்ணனின் வெற்றியைக் கொண்டாடிய அனைத்து நல் உள்ளங்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் அண்ணன் அடைந்த மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அண்ணனோடு தேர்தல் களத்தில் இருக்கும் தறுவாயில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தேர்தலுக்கு முன்பே திருமாவை திமுகவோடு சேர விடாமல் சிலர் சதி செய்தனர். அண்ணனுக்கும் தினகரனுக்கும் தொடர்பு என்றார்கள்.

தளபதியே திருமா அண்ணனிடம் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். கட்சித் தலைவராக, நிறுவனராக, அவரது கட்சியை விட்டு விட்டு வேறு ஒரு கட்சியில் சேர்ந்து நிற்பது என்பது சுலபம் அல்ல. எனவே, ரவிக்குமார் அண்ணனை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, தான் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் என்பதால் சிரமம் என்று விளக்கியிருக்கிறார்.

அடுத்தது சின்னம் - தேர்தல் ஆணையம் அவருக்கு மோதிரம் என்றார்கள். அண்ணனும் சம்மதம் தெரிவித்துவிட்டார், அடுத்த நாள் அழைத்து மோதிரம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், பிறகு நாற்காலி என்று சொல்லியிருக்கிறார்கள், அதில் திருமா அண்ணனுக்கு முழு சம்மதம் ஏற்படவில்லை. அண்ணன் பானைச் சின்னம் கேட்டிருக்கிறார். முதலில் சம்மதம் சொல்லிப் பின்னர் மறுத்திருக்கிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் அண்ணன், பானைச் சின்னம் வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்துகொண்டு சொன்னவுடன், மீண்டும் திருமா கடும் முயற்சி செய்து பானை சின்னத்தைப் பெற்றிருக்கிறார். ஒரு சின்னத்தை ஒதுக்கத் திருமாவை அலைய விட்டிருக்கிறார்கள்.

அடுத்து இராமதாசு அண்ணன் திருமாவைத் தோற்கடிக்க, தினமும் அறிக்கை மூலம் திருமாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். அன்புமணி நாடாளுமன்றம் செல்ல வேண்டும், திருமா தோற்க வேண்டும் எனப் பல கோடிகளைச் செலவு செய்திருக்கிறார். திருமாவைத் தோற்கடிக்க வன்னிய மற்றும் பிற சாதி மக்கள் மத்தியில் பல திட்டங்களைச் செய்திருக்கிறார்.

தினமும் தேர்தல் செலவுக்கு நிறைய பணம் செலவாகும். அதற்குச் சிரமப்பட்ட தறுவாயில் திருச்சியில் உள்ள தொழிலதிபர் மிகப் பெரும் தொகையைக் கொடுத்தனுப்பியிருக்கிறார், அதனைக் காவல் துறை பிடித்துவிட்டது. திருமா அண்ணன் உடனே தமிழகத்து மிகப் பெரும் காவல் துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் அந்தப் பணத்தை மீட்க முடியவில்லை (ஆனால், ஓபிஎஸ் மகன் பல கோடி செலவு செய்ததற்கு வீடியோ ஆதாரம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை).

தமிழ்நாட்டின் மிகப் பெரும் நட்சத்திர வேட்பாளர் அண்ணன் தொல்.திருமா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டியவர். ஆனால், மக்களுக்குள் சாதி வெறியைத் தூண்டி, கோடி கோடியாகப் பணம் செலவு செய்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் எனப் பல சக்திகள் வேலை பார்த்திருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட அண்ணனுக்கு ஐந்து லட்சம் [5,00,229] வாக்குகள் என்பது சாதாரண வாக்குகள் அல்ல. 3,219 வாக்குகள் வித்தியாசம் என்பது பல லட்சங்களுக்குச் சமம்! சிதம்பரம் வாக்காளருக்குக் கோடானு கோடி நன்றிகள்.” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

click me!