
ஜெயலலிதா மறைவிற்குப் பின் பன்னீரை முதல்வாராக முதல்வராக்கினார் சசிகலா. முதல்வர் கனவில் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற கணக்குப் போட்ட சசிகலா பன்னீரின் பதவியை பறித்தார். பாவம் யார்கண்ணு பட்டதோ சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தனக்கு விசுவாசமாக இருப்பார் என எண்ணி எடப்படியாரை கூவத்தூரில் தேர்ந்தெடுத்த பரப்பன அக்ரஹாரா தலைவி சசிகலா. ஆட்சியில் அமர்ந்தத எடப்பாடியார் தனக்கான அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்ள தவறவில்லை, தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியாரா அல்லது நிழலாக இருக்கும் இளங்கோவனா என அமைச்சர்களே கேட்க்கும் அளவிற்கு ஒரு அதிகார மையத்தை உருவாக்கிவிட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மன்னார்குடியிலிருந்து வந்த சசிகலா எப்படியோ, அதுபோலவே இப்போது எடப்பாடிக்கு பழனிசாமிக்கு சேலத்திலிருந்து வந்திருக்கும் இளங்கோவன் அதிகாரமையாமாகிவிட்டார் என்பதுதான் அதிமுக வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. யார் அந்த இளங்கோவன்? எடப்பாடியின் ஹிஸ்டரியை தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக இந்த இளங்கோவனை தெரிந்திருக்கும்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த இளங்கோவன். இவர் சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் சேலம் மாவட்டம் புறநகர் அம்மா பேரவை செயலாளர். மத்தியக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவராகத் பொறுப்பு வகிக்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் எடப்பாடி அமைச்சராக இருந்த போது, எடப்பாடியின் நிழலாக இருந்தவர் இந்த இளங்கோவன். சேலம் கிழக்கு மாவட்டத்தில் நாளுக்கு நாள் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள அவரால் வளர்க்கப்பட்டவர் தான் இந்த இளங்கோவன்.
எடப்பாடி அமைச்சராக இருந்தபோதே சேலம் மாவட்டக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பதவியை இளங்கோவனுக்கு கொடுத்தார். சேலத்தில் ஒரு சின்ன வட்டத்திற்குள் சென்னைக்கு வந்தார் இளங்கோவன். இரண்டாயிரம் கோடிக்கு மேல் சொத்து, பினாமி பேரில் சொத்துகள் என ஏராளம். இவரே எடப்பாடியாரின் பினாமிஎன பேசப்பட்ட நிலையில், இளங்கோவனுக்கு கிளைகளாக பினாமிகள் கூட்டம் தமிழகம் முழுவதும் கேன்சர் போலப் பினாமிகள் பரவிக் கிடக்கிறதாம்...
சேலத்தில் நடக்கும் நகைக்கடை துணிக்கடை திறப்புவிழா மற்றும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இளங்கோவனின் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.
தமிழகம் முழுவதும் கோவில் குளங்கள், கல்யாணம் நிகழ்ச்சிக்கு இளங்கோவன் சென்றால் முதல்வர் எடப்பாடியாருக்கு என்ன மரியாதையோ அதில் கொஞ்சமும் குறையாமல் பாதுகாப்பு, மரியாதை தருகிறார்களாம். அமைச்சர்களை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு நிழல் முதல்வராகவே தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என அமைச்சர்கள் கூட்டம் புலம்பிக்கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றபோது, திருச்சி முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. போக்குவரத்து சரிசெய்தனர் அப்போது முதல்வர் திருச்சிக்கு வருகிறாரா என்ற தகவல் பரவியது. ஆனால் வந்தது சேலத்து இளங்கோவன் எடப்பாடியாருக்கு என்ன மரியாதை கிடைக்குமோ அதே வரவேற்ப்பு தடபுடலான அளிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அமைச்சர்கள் இரண்டு பேர் வலது பக்கமும் இடது பக்கமுமாக வர இவர் பச்சை நிற துண்டைக் கட்டிக் கொண்டு நடுவிலே வந்தாது அனைவருக்கு அதிர்ச்சியான காட்சிதான்.
அதேபோல அமைச்சரோ, எம்.எல்.ஏக்களோ செய்தியார்களிடம் சந்திக்க வேண்டுமென்றால் இவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் மீடியா முன்பு பேசணும் அதற்கு ஒரு கல்வித்துறை அமைச்சரின் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை சொல்லலாம்.
அடே போல முதல்வரிடம் எந்த பைல் போனாலும் இவரிடம் கேட்காமல் வாங்காமல் எடப்படியார் கையெழுத்துப் போடுவதிள்ளயாம், அப்படி மீறி வந்தாலும் இளங்கோவனை பார்த்தீங்களா என கேட்பாராம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர்கள் வீட்டில் நடக்கும்போது, பழைய ரூபாய் நோட்டுகள் தமிழக கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளீர் சுயஉதவிக் குழுக்களை வைத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது எல்லாம் சேலத்து இளங்கோவன் தான் என பரவலாக பேசப்பட்டது.
நான்கு நாட்களாக இவர் தலைவராக இருந்த வங்கியில் ஐடி ரெய்டு நடந்தது. இதுவும் தற்போது நிலுவையிலேயே இருக்கிறது.
இப்படி அதிகார மையாமாக உருவாகிவிட்ட சேலம் இளங்கோவன் எந்த நேரமும் முதல்வர் அலுவலகத்திலேயே இளங்கோவனைப் பார்க்க முடிகிறது. அமைச்சர்களை அசால்டாக டீல் செய்வதில் இளங்கோவன் புலிதான், ஜெயலலிதா இருந்தபோது சசிகலாகுடும்ம்பதில் உள்ளவர்கள் அமைச்சர்களை பெயர்சொல்லி அழைப்பதுண்டு ஆனால் இளங்கோவனோ அமைச்சர்களைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல் அவர்கள் துறையின் பெயரைச் சொல்லி அழைப்பாராம். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை, ஏம்பா ‘ஹெல்த்து... இந்த வேலையை சீக்கிரமா முடிங்க..’ என ஒரு ஃபைலை நீட்டி இருக்கிறார்.
இதனால் செம கடுப்பான விஜயபாஸ்கர், ‘என்னது ஹெல்த்தா? எனக்கு பேரு இல்ல? என் பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க.. இல்லை சார்ன்னு கூப்பிடுங்க... நான் என்ன நீங்க வெச்ச ஆளா? இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத...’ என எரிந்து விழுந்துள்ளார். அதேபோல, அமைச்சர் கரூர் விஜயபாஸ்கரிடமும் திட்டு வாங்கியிருக்கிறார் இளங்கோவன். ஆனால், ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலாவைப் போல இன்று எடப்படியாருக்கு நான் தான் சசிகலா என இருமாப்பாக வலம் வருகிறது இந்த அதிகார மையம்...