அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க சிறப்பு யாகம்.!

Published : Sep 24, 2020, 08:44 AM IST
அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க  சிறப்பு யாகம்.!

சுருக்கம்

தமிழகத்தில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.  

 தமிழகத்தில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு, மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த சுதர்சன யாகத்தில் பங்கேற்றனர். யாகத்தில், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இந்த யாகம் குறித்து விஷ்ணுபிரபு பேசும் போது.. ''சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறவும், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி தொடரவும், கொரோனா ஒழிந்து, மக்கள் சுபிட்சமுடன் வாழவும் பிரார்த்தனை செய்தோம்,'' என்றார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!