திமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..!

Published : Sep 24, 2020, 08:16 AM IST
திமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..!

சுருக்கம்

திமுக மாநிலங்களவை எம்.பி. ஆர்.எஸ். பாரதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இருந்த எம்.பி.களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 73 வயதான திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதிக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.  இதனையடுத்து டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆர்.எஸ். பாரதி பங்கேற்றார். பின்னர் கடந்த 19-ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி தன்னை  தனிமைப்படுத்திக்கொண்டார். 
இந்தநிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆர்.எஸ். பாரதி நலமாக இருப்பதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ். பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..