
நெல்லை புத்தக திருவிழா :
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நெல்லையில் பொறுநை நெல்லை ஐந்தாவது புத்தகத்திருவிழா நடந்தது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா நேற்று வரை நடைபெற்றது.புத்தக திருவிழாவில் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கருத்தரங்கம் தினமும் நடைபெற்றது.
நெல்லை கண்ணன் பேச்சு :
இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், 'எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு, காமராஜரைப் போல் முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின், அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். ஒரு நல்ல முதலமைச்சர், நிறைய முயற்சி செய்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் குழந்தைகள் ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற ஒரு ஆணையை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள். குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள். அவர்களை இந்தப் பள்ளி கூடங்கள் முளையிலேயே கருக்கிவிடும். அதுபோல புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான், புத்தகம் என்பதே வடமொழி, இதனை படைப்பாளிகளின் சங்கமம் என அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என்று பேசினார்.