தெரிந்தே செய்த தவறுக்கு பதில் தெரியாமல் திணறும் ஓபிஎஸ்... 30 நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 11, 2020, 11:11 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இ

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதற்கு விளக்கமளிக்க ஒருமாதம் அவகாசம் வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க;- சிந்தியாவின் மகனை சிந்திக்க வைத்த பிரதமர் மோடி... 60 நிமிடங்களில் காங்கிரஸ் ஆட்சியை காலி பண்ணிய பாஜக..?

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 14-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க;- மத்திய அமைச்சராகிறார் ஜி.கே.வாசன்..? சீட் கொடுத்த அதிமுகவுக்கு ஆப்பு வைத்த தமாகா..!

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில் தர ஒரு மாதம் அவகாசம் கேட்டு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

click me!