அன்பழகனை அவையில் வச்சுகிட்டு நான் தினமும் அவதிப்படுறேன்..! சபாநாயகரை புலம்பவிட்ட திமுக எம்.எல்.ஏ

 
Published : Jul 03, 2018, 04:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
அன்பழகனை அவையில் வச்சுகிட்டு நான் தினமும் அவதிப்படுறேன்..! சபாநாயகரை புலம்பவிட்ட திமுக எம்.எல்.ஏ

சுருக்கம்

speaker dhanapal revealed his opinion about dmk mla anbazhagan

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தான் அவதிப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். 

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த மே 29ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர், வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இன்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு வந்தவுடன் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் பேசுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரினார். 

அதற்கு சபாநாயகர் தனபால் நகைச்சுவையாக பதிலளித்தார். அப்போது பேசிய சபாநாயகர் தனபால், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினமும் அவதிப்படுகிறேன். சபைக்கு வந்தவுடனே பேசுவதற்கு அனுமதி கேட்கிறார். அனுமதிக்கவில்லை என்றால் உடனே வெளியே சென்றுவிடுகிறார் என தெரிவித்தார்.  
 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்