மீண்டும் மிரட்டும் சபாநாயகர் தனபால் !! டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு நோட்டீஸ் !!!

 
Published : Sep 01, 2017, 10:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
மீண்டும் மிரட்டும் சபாநாயகர் தனபால் !! டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு நோட்டீஸ் !!!

சுருக்கம்

speaker danapal serve notice to 19 mla

மீண்டும் மிரட்டும் சபாநாயகர் தனபால் !! டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு நோட்டீஸ் !!!

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரிடம்  கடிதம் அளித்த விவகாரத்தில் அவர்கள் வரும் 5 ஆம் தேதிக்கும் உரிய பதில் அளிக்க வேண்டும் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்த டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் 19 மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து 19 பேருக்கும், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட 19 பேரும், சட்டசபைக்கு வெளியே சபாநாயகர் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அதனால் அவரின் உத்தரவு தங்களை  கட்டுப்படுத்தது என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டி.டி.வி. ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் இன்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் அளித்த விளக்கம், இடைக்கால விளக்கமாக எடுத்துக் கொள்வதாகவும், முழுமையான விளக்கத்தை வரும் 5 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.



 

 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!