சமஸ்கிருதத்தில் பேசுங்க ! சர்க்கரை நோய் இல்லாம வாழுங்க !! பாஜக எம்.பி.யின் அதிரடி அட்வைஸ் !!

By Selvanayagam PFirst Published Dec 13, 2019, 6:48 AM IST
Highlights

சமஸ்கிருத மொழி பேசினால் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என பாஜக எம்.பி கணேஷ் சிங் அதிரடியாக அட்வைஸ் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது. 

மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய மத்தியபிரதேச மாநிலம் சட்னா தொகுதி பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, ''சமஸ்கிருத மொழியை தினமும் பேசுவதால் மனித உடலின் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும். மேலும் மனித உடலில் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என அமெரிக்காவை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார்..

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள ஆய்வில் சமஸ்கிருத மொழியில் கணினி புரோகிராமிங் செய்தால் பிரச்சனை இல்லாமல் செயல்படும். 
உலகத்தில் உள்ள 97 சதவீகித மொழிகளின் அடித்தளம் சமஸ்கிருத மொழியாகும். ஆங்கிலத்தில் உள்ள சகோதரர் (பிரதர்), கவ் (பசு) ஆகிய சொற்கள் சமஸ்கிருத மொழியில் இருந்துதான் வந்ததுதான் என்று பேசினார்.

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு மக்களவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.

click me!