
2ஜி வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள்தான் ஆரம்பம் முதலே இருந்து வந்தது என்றும் தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாஜக மன்னிப்பு கேட்குமா? என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி கோடி இழப்பு ஏற்பட்டதாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம்
கூறியுள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5 ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி
உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்த வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள்தான் ஆரம்பம் முதலே இருந்தது. தற்போது, அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், பாஜக மன்னிப்பு கேட்குமா? என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு 2ஜி ஊழல் என்று கூறித்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அத்துடன் போஸ்டர்கள் உட்பட அனைத்து பிரச்சாரங்களிலும் காங்கிரசும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டதாக கூறி வந்தனர்.
தற்போது, அனைவரும் விடுதலையாகி உள்ள்தால் பாஜக சார்பில் மன்னிப்பு கேட்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். மேலும் வழக்கில் விடுதலையான அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் குஷ்பு தெரிவித்துள்ளார்.