எடப்பாடியை நம்பாத அதிமுக தொண்டர்கள்...! தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என்கிறார் புகழேந்தி!

 
Published : Dec 26, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
எடப்பாடியை நம்பாத அதிமுக தொண்டர்கள்...! தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என்கிறார் புகழேந்தி!

சுருக்கம்

Soon the change in Tamil Nadu will come - Pugazendhi

தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும், அதிமுக தொண்டர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நம்பவில்லை என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி திவாகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தினகரனின் இந்த
வெற்றியை அடுத்து, அவரது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. 

டிடிவி தினகரனுக்கு ஆதரவாளர்கள் சிலரை நேற்று அதிமுக நீக்கியது. இதற்கு டிடிவி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், டிடிவி ஆதரவாளரான புகழேந்தி, கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு, செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தமிழகத்தை சசிகலா விரைவில் ஆட்சி செய்வார் என்றார். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், எடப்பாடி நம்பி பயனில்லை என்று புரிந்து கொண்டு விட்டனர். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்