தினகரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு போனில் மிரட்டுறாங்க... போலீசில் புகார் அளித்த சசிகலா புஷ்பா!

First Published Dec 26, 2017, 3:01 PM IST
Highlights
Sasikala Pushpa complained to the police


ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி வென்ற தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததையடுத்து அவருக்கு அதிமுக தரப்பிலிருந்து தொலைப்பேசியில் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வாக்குகள் பெற்று வென்றுள்ளார் தினகரன். ஆளும்கட்சி அதிமுக படுதோல்வியடைந்தது, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Latest Videos

தினகரனின் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  இவர் அதிமுக அணி பிளவுபட்டு இரு அணிகளான போது எந்த அணியிலும் இணையாமல் இருந்துவந்தார்.

இதனை தொடர்ந்து, இடைதேர்தலில் வென்ற தினகரனை நேற்று மாலை சென்னை பெசன்ட் நகரில்  உள்ள அவரது வீட்டில்  சசிகலா புஷ்பா சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

தினகரனை சந்தித்த பின் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணன் தினகரன் வெற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற அண்ணன் தினகரனுக்கு வாழ்த்துகள், ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.  தினகரன் தலைமையில் செயல்பட தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போல பலரும் தினகரனின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறார்கள். 

மேலும் பேசிய அவர் முதல்வர், துணை முதல்வர் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள், அதிகாரத்தை மீறி மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என பார்க்க வேண்டும், ஒரு தலைவருக்கு உள்ள பண்பு விட்டு விடுக்கக் கூடாது என்பது தினகரனிடம் இருக்கிறது இவ்வாறு பேட்டியளித்தார்.

இந்நிலையில்,  தினகரனை சந்தித்த சசிகலா புஷ்பா எம்பிக்கு நேற்று இரவு முதல் அதிமுக தரப்பிலிருந்து தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அவரது வீட்டுப்பணியாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

click me!