காங். தலைவராக சோனியா காந்தி தொடர்வார்... செயற்குழு கூட்டத்தில் முடிவு!!

Published : Mar 13, 2022, 11:00 PM IST
காங். தலைவராக சோனியா காந்தி தொடர்வார்... செயற்குழு கூட்டத்தில் முடிவு!!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு கடந்த 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

உ.பி.யில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை ஏமாற்றமடைய செய்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, அம்பிகா சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார் என முடிவெடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரும் காலத்தில் எங்களை வழிநடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். அவரது தலைமையின் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் வரவிருக்கும் தேர்தலுக்கு எப்படி தயார் செய்வது என்பது குறித்து ஆலோசித்தோம். 5 மாநில தேர்தல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு