சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகல்;மறுத்தது காங்கிரஸ் கட்சி..

By T BalamurukanFirst Published Aug 24, 2020, 7:36 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகியதாக வெளியான செய்தி தவறானது என, காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
 

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகியதாக வெளியான செய்தி தவறானது என, காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து, கட்சியின் இடைக்கால தலைவராக கடந்தாண்டு ஆக.,10ம் தேதி சோனியா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ்க்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர், இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா விலக முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இதனை காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,  'சோனியாகாந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது' என விளக்கம் அளித்துள்ளார்.

click me!