உன்னயெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது! ராகுலை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் களம் இறங்கி சோனியா!

By sathish kFirst Published Nov 24, 2018, 6:05 PM IST
Highlights

ராகுல் காந்தியை நம்பினால் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது என்று காங்கிரஸ் தலைவர்கள் நச்சரிப்பை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பிரச்சாரத்தில் இறங்கினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை முன்பு போல் சீராக இல்லை. அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படும் அவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிற்கு சிகிச்சை சென்று வருகிறார். மேலும் அவ்வப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார். தனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை தெரிந்தே ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவியை கொடுத்திருந்தார்சோனியா.

உடல் நிலை மேலும் மோசமான பிறகு ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமித்துவிட்டு அரசியலுக்கு கிட்டத்தட்ட முழுக்கு போட்டுவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். டெல்லியில் தினந்தோறும் தனது நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் சோனியா அரசியல் என்றால் காதை பொத்திக் கொண்டு அமர்ந்துவிடுவதாக கூட கூறப்பட்டது. கலைஞர் மறைவுக்கு கூட சென்னைக்கு வராத சோனியா, பிறகு ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும் கூட இந்த பக்கம் எட்டிப்பாக்கவில்லை.

இப்படி அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்த சோனியா திடீரென தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளார். தெலுங்கானாவின் மெடக்கல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றார். தெலுங்கான என்கிற ஒரு மாநிலம் உருவான பிறகு முதன்முறையாக சோனியா அங்கு சென்றார். மேலும் தெலுங்கானாவை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சி தான் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் சோனியா எடுத்துரைத்தார். சோனியாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் சோனியா காந்தி முதல்முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கானாவில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ராகுல் காந்தியால் 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தை தனி ஆளாக எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் ராகுலை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று சில நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியே சோனியாவை மீண்டும் தேர்தல் களத்திற்கு அழைத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!