அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது 'தல' எப்போதும் ஒரு தனிரகம்! காங்கிரஸ் கட்சி பிரமுகர் வாழ்த்து

Published : Jan 22, 2019, 12:59 PM ISTUpdated : Jan 22, 2019, 01:05 PM IST
அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது 'தல' எப்போதும் ஒரு தனிரகம்! காங்கிரஸ் கட்சி பிரமுகர் வாழ்த்து

சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார். அப்படி பட்ட அஜித்தையே அறிக்கை விட வைத்துள்ளார் தமிழக பிஜேபி லீடர் டாக்டர் தமிழிசை.

திருப்பூரில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்தனர், அப்போது தமிழிசை மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பேசி அஜித்தை பற்றியும் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இதனால் கடுப்பான தல 24 மணி நேரத்திற்குள் தல அஜித் நேரடியாகவோ மறைமுகமாக அரசியலில் ஈடுபடும் ஆர்வம் எனக்கில்லை. என்னுடைய பெயரையோ என்னுடைய ரசிகர்களின் பெயரையோ அரசியலுக்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனக்கு  பிடிக்கும் எனக் கூறியிருந்தார். அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல அரசியல் தலைவர்களும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி,   ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும்,  அதிகாரத்திற்கு  அனுக்கமாக இருப்பதற்காகமட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்! என புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி