நாடாளுமன்ற தேர்தலில் சில கட்சிகள் தொகுதிகளை விட்டுக்கொடுத்தால் வெற்றி நிச்சயம்! முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

By vinoth kumar  |  First Published Dec 10, 2023, 1:24 PM IST

 நடந்து முடிந்த தேர்தலில்  3 மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருந்தாலும் ராகுல்காந்தியின் ஜோடோ யாத்திரையின் காரணமாக தெலுங்கானாவில் அபரீதமான வெற்றியைபெற்றது. 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் தொகுதிகளை விட்டுக்கொடுத்தால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி;- நடந்து முடிந்த தேர்தலில்  3 மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருந்தாலும் ராகுல்காந்தியின் ஜோடோ யாத்திரையின் காரணமாக தெலுங்கானாவில் அபரீதமான வெற்றியைபெற்றது. மேலும் ராஜஸ்தானில் 1 சதவிகிதம், மத்திய பிரதேசத்தில் 8 சதவிகிதம் மட்டுமே காங்கிரசை விட பாஜக கூடுதலாக பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Latest Videos

தேர்தலில் வெற்றி தோல்வி சஜகம். வழக்கமாக மாநிலக் கட்சிகள் 1 முதல் 2%வாக்குகளை மட்டுமே பிரிக்கும் நிலையில் நடந்து முடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கும் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டதன் காரணமாக மாநில கட்சிகள் வாக்குகளை பிரிக்கவில்லை என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி மறுபடியும் வீர்கொண்டு எழும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியை ஒருக்கிணைக்க வேண்டும் என்றும் அதில் ஒரு சில கட்சிகள் விட்டுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே பாஜகவிற்கு வாங்கு வங்கிகள் உள்ளது. பிரதமர் மோடியின் மேஜிக் முடிவடைந்த விட்டது என்றும் இந்தியா கூட்டணியில் சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்றார். புதுச்சேரி மாநில மக்கள் ஊழல் ஆட்சியை ஒழிக்க  தயாராக உள்ளதாகவும் கரடி போல் கத்தி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியும் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட யாரும் பதில் கூறவில்லை. 

நிலப்பிரச்சனையில்  காவல்துறையினர்  ஏஜண்டுகள் போல செயல்படுகின்றனர். கல்வித்துறையில் முட்டை போடுவதில் லஞ்சம். அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்து வாங்குகின்றனர். ஊழலை தவிர்த்து வேறொன்றும் நடைபெறவில்லை என நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

click me!