
1. கான்பூர் கல்லூரியில் சட்டம் பயின்ற பின் ராம் நாத் கோவிந்த் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக டெல்லி சென்றார். அங்கு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்ட கோவிந்த் ஐ.ஏ.எஸ். தேர்வில் 2 முறை தோல்வியுற்றார். 3-வது முறை தேர்ச்சி பெற்ற கோவிந்த், குடிமைப்பணிக்குச் செல்லாமல், வழக்கறிஞராக பயிற்சி பெற முடிவு செய்தார்.
2. கான்பூர் மாவட்டம், தான் பிறந்த கிராமமான தேராப்பூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை சமூகதாயக் கூடமாக மாற்ற அன்பளிப்பாக அளித்தார்.
3. உத்தரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தின் வாக்குகள் அனைத்தும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் இருந்த போது, கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் ராஜ்நாத் சிங்குடன் தீவிரமாக கோவிந்த் வாக்குச் சேகரித்து, கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தலித் மக்களிடையே மாயாவதிக்கு மாற்றுசக்தியாக கோவிந்த் இருந்து வருகிறார்.
4. பா.ஜனதா கட்சியில் கோவிந்த் சேர்வதற்கு முன், கடந்த 1977-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு தனிச் செயலாளராக பணியாற்றியவர்.
5. பீகார் ஆளுநராக கோவிந்த் நியமிக்கப்பட்டதே, அடுத்து வரும் தேர்தலில் அந்த மாநிலத்தில் தலித் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வளைத்துப்போட பா.ஜனதா அரசால் நியமிக்கப்பட்டார்.
6. பீகார் மாநில ஆளுநராக கோவிந்த் நியமிக்கப்பட்டதும், சர்ச்சை தொடங்கியது. முதல்வர் நிதிஷ்குமார், தன்னை ஆலோசிக்காமல் மத்திய அரசு ஆளுநரை நியமித்துவிட்டது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
7. பீகார் முதல்வராக 2-ம் முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அப்போது நடந்த பதவி ஏற்புவிழாவில், துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பதவி ஏற்கும் போது, வார்த்தைகளை தவறாக உச்சரித்து விட்டதற்காக, அதை குறிப்பிட்டுக் கூறி அவ்வாறு கூறக்கூடாது என்று மீண்டும் சரியாக்க கூறுங்கள் என ஆளுநர் கோவிந்த் கண்டித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.