அண்ணாசாலையில் விவசாயமா நடக்குது?: ஆளும் வி.ஐ.பிக்களை அலறவிடும் கேள்விகள்.

Asianet News Tamil  
Published : Nov 03, 2017, 08:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
அண்ணாசாலையில் விவசாயமா நடக்குது?: ஆளும் வி.ஐ.பிக்களை அலறவிடும் கேள்விகள்.

சுருக்கம்

Social media users are troll ADMK Ministers

’ஜல’தோஷத்தில் இருக்கும் சென்னைவாசிகளுக்கு இருக்கிற இம்சை போதாதென்று அ.தி.மு.க.வின் ஆளும் அணியை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் உதிர்க்கும் பொன்மொழிகள்தான் பெரும் கடுப்பாய் இருக்கிறதாம். இது பற்றி இணையதளத்தில் செம தாளிப்பு வாங்கிக் கட்டுகிறார்கள் அவர்கள். 

அவர்கள் திருவாய்  மலர்ந்த விஷயங்களாக இணையத்தில் உலாவும் விஷயங்களும், அதற்கு சிட்டிசன்களின் பதில்களும்...

#    அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, மழை பாதிப்புகளை சரி செய்ய அதைவிட சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வைத்திருக்கிறது தமிழக அரசு -    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

* தலைவா நீங்க பேசுறத பார்க்கும்போது நிவாரண பொருட்கள்ள ஒட்டுறதுக்கு டிரம்ப் படம் போட்ட ஸ்டிக்கரை ரெடி பண்ணிட்டீங்க போல தெரியுதே! ஆஹா புயல் நேரத்துல இவங்க டார்ச்சர் அடங்காது போலிருக்கேடா ஆண்டவா.

#    மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். - அமைச்சர் ஜெயக்குமார்.

*     மழை பெய்ஞ்சா வூடு ஒழுகத்தான் செய்யும், எங்கே உங்க வூடு ஒழுகுதா அமீச்சரே? மழை பெய்ஞ்சா ரோட்டுல நடக்குறச்சே சேறடிக்கத்தான் செய்யும், எங்கே நீங்க நடந்தே வாங்களேன் பார்ப்போம். மழை பெய்ஞ்சா கரண்ட் கட்டாகத்தான் செய்யும், எங்க உங்க  பங்களா பக்கம் ஒரு மணி நேரம் கரண்ட் கட்டாவுதான்னு காட்டுங்க பார்ப்போம்.

#    பருவமழை ஓரளவாவது பெய்தால்தான் விவசாயம் செழிக்கும்.
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*    தலைவரே நீங்க சொல்றது சரிதான். ஆனா அதுக்காக என்னமோ அண்ணாசாலையிலேயே விவசாயம் பண்ற மாதிரி ரோட்டுல அம்மாம் பெரிய பள்ளங்கள்ள தண்ணீர் சேர்த்து வைக்கிறதெல்லாம் நல்லாவா இருக்குது?
இப்படியாக ஏகத்துக்கும் வாரி வகுந்தெடுத்திருக்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!
TN CM Vjiay: அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!