தமிழகத்தை காப்பாற்றிய புண்ணியவான்கள் - நெட்டிசன்கள் ஆரவாரம்...

 
Published : Feb 14, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தமிழகத்தை காப்பாற்றிய புண்ணியவான்கள் - நெட்டிசன்கள் ஆரவாரம்...

சுருக்கம்

இன்றோ அல்லது நாளையோ ஆளுநர் அழைப்பு விடுத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தையே கட்டி ஆளும் பெரும் சக்தியை பெற்றிருந்தார் வி.கே.சசிகலா. 

சசிகலாவின் எண்ணத்தில் மொத்தமாக மண்ணை வாரி போட்டு விட்டனர் இரண்டு நீதிபதிகள். 

ஒருவர் பினாகி சந்திரகோஸ், மற்றொருவர் அமிர்வராய். 

தமிழகத்தை ஆட்டி படைக்க இருந்த கேடுகெட்ட காலம் இவர்கள் அளித்த முக்கிய தீர்ப்பால் நீங்கி விட்டது என பெரும்பாலான நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். 

முதலில் பினாகி சந்திரகோஸ் பற்றி பார்ப்போம்.

1952 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் பிறந்த இவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்.  இவர்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக வழக்கறிஞர் தொழில் செய்து வந்த குடும்பம்.

பினாகி சந்திரகோஸ் திவான் வாரனாசி கோஸ் எனும் புகழ் பெற்ற குடும்பத்தை சார்ந்தவர் ஆவார். மேலும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்திலும் பணியாற்றியுள்ளார். இவர்தான் சசிகலா முக்கிய குற்றவாளி என தீர்ப்பு எழுதிய நீதிபதி ஆவர். 

அடுத்த நபர் அமிதவராய் பற்றி பார்ப்போம். 

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் பகுதியை சேர்ந்த இவருக்கு 62 வயதாகிறது. இவர் ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக இருந்தவர். பின்னர் ஜவகாத்தி நீதிமன்றத்தில் பணிபுரிந்துள்ளார். 

பினாகி சந்திரகோஸ் மற்றும் அமிதவராய் ஆகிய இருவரும் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்திருப்பதால் இவர்களை புகழ்ந்து கடவுளே தெய்வமே என கூறி சசிகலாவை பிடிக்காதவர்கள் மீம்ஸ்களை தயார் செய்து தெறிக்க விடுகின்றனார். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு