சசிகலாவிற்கு சிறையில் சாதாரண அறை....? மிஸ் ஆனது " A பிரிவு  வசதி"...

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சசிகலாவிற்கு  சிறையில்  சாதாரண   அறை....?  மிஸ்  ஆனது  " A பிரிவு  வசதி"...

சுருக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு  எதிராக உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது . அதாவது ஜெயலலிதா  இறந்து  சரியாக  72  ஆவது   நாளான  இன்று, தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மறைந்த முதல்வர்  ஜெயலலிதா , சென்னை அப்போல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று  வந்த  நாட்களும் 72 என்பது குறிப்பிடத்தக்கது.  தீர்ப்பு வெளியான  இந்நிலையில் தற்போது , இவர்கள்  நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

தமிழக  போலீசார் சோதனை :

இந்நிலையில் எந்த  நேரத்திலும், சசிகலா உள்ளிட்டோரை கைது செய்து, பெங்களூரு நீதிமன்றத்தில்  ஆஜர்  செய்ய  உள்ளதால், இதற்கு முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை  தமிழக காவல் துறையினர் தற்போது சோதனை  செய்து வருகின்றனர்.

எந்த விஷேச  சலுகையும் இல்லை :

முன்னதாக , இதே சொத்த குவிப்பு வழக்கில்,  மறைந்த முதல்வர் கைதான போது,  அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட A பிரிவு  வசதி, சசிகலாவுக்கு  வழங்க  கூடாது  என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டக்கூடாது எனவும் கடுமையாக தீர்ப்பு  கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து , சசிகலாவிற்கு சிறையில்  சாதாரண அறை தான்  ஒதுக்கப்படும்  என  தெரிகிறது.   

 

PREV
click me!

Recommended Stories

DK Shivakumar: பதவியேற்றதும் முதல் கையெழுத்து: மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!
CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..