
சொத்துகுவிப்பு வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் சிக்கியுள்ளதால் கீழ் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யபட்டுள்ளது. 570 பக்க இந்த தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் சிறு சலுகை கூட காட்டப்படவில்லை.
அதாவது இவர்கள் உடனே ஜாமீன் பெற்று சுதந்திர பறைவைகளாக இருக்கவே முடியாது.
தற்போது நீதிபதிகள் இவர்களை குற்றவாளிகள் என்று சொல்லியிருப்பதால் உடனே பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பானது சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்ற பெங்களுரு நீதிமன்றத்தில் 48 வது அறையில் சரண் அடைய வேண்டும் என்றும், அந்த அறையில் இருக்கும் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் மூன்று பேரும் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலாவும், இளவரசி சுதாகரனும் சரண் அடைந்து விட்டால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் கர்நாடக போலீசார் சென்னைக்கு வந்து இவர்களை கைது செய்து அழைத்து செல்வார்கள்.
தற்போது பறப்பன அஹ்ரகார சிறைச்சாலை தயாராக உள்ள நிலையில் தமிழக போலீசார் சசிகலாவை பாதுகாப்பாக ஓசூரை அடுத்த கர்நாடக எல்லையில் ஒப்படைப்பார்கள்.
அங்கு இருந்து கர்நாடக போலீசார் பெங்களூரு நீதிமன்றம் கொண்டு சென்று ஒப்படைப்பார்கள்.