’என் இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால் முகிலனால் ஏற்பட்ட அவமானங்களால் தற்கொலை செய்திருப்பாள்’...

By Muthurama LingamFirst Published Jul 16, 2019, 5:01 PM IST
Highlights

சமூக செயல்பாட்டாளர் முகிலனின் மீது பாலியல் வழக்குக் கொடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் முகநூலில் தனது தரப்பு, நியாயங்களை, புலம்பல்களை, சில முக்கிய தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்வதை நிறுத்தவில்லை அய்து என்கிற இசை என்கிற ராஜேஸ்வரி.
 


சமூக செயல்பாட்டாளர் முகிலனின் மீது பாலியல் வழக்குக் கொடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் முகநூலில் தனது தரப்பு, நியாயங்களை, புலம்பல்களை, சில முக்கிய தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்வதை நிறுத்தவில்லை அய்து என்கிற இசை என்கிற ராஜேஸ்வரி.

இவை கடைசியாக அவர் வெளியிட்டிருக்கும் மூன்று பதிவுகள்...Aithu Isai
21 hrs · 
சென்னையில் சிபிசிஐடி யிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு சிறை செல்வதற்கு இடைப்பட்ட நாட்களில் முகிலன் அலப்பறைகள்:முகிலன்: எனக்கு மட்டன் பிரியாணி தான் வேண்டும் வாங்கிட்டு வாங்க, பொங்கல் வாங்கிட்டு வாங்க, ஆம்லேட் வாங்கிட்டு வாங்க, காஃபி வாங்கிட்டு வாங்க. சிபிசிஐடி எல்லாத்தையும் வேளை வேளைக்கு வாங்கி தந்துட்டாங்க.

சிபிசிஐடி: சார் சர்க்கரை போடாமல் வாங்கிட்டு வரோம் உங்களுக்கு சுகர் இருக்குல்ல...

முகிலன்: சர்க்கரை போட்டு தான் வேணும் வாங்கிட்டு வாங்க.

அவர் கேட்ட எல்லாத்தையும் வாங்கி தந்துட்டாங்க சிபிசிஐடி. ஒரு நாளைக்கு 5 காஃபி.

ஒட்டகம் தெரியுமா ஒட்டகம் அது கிடைக்கும் போது தண்ணீரையும், உணவையும் சாப்பிட்டுக்கும் அப்படின்னு ஒரு தத்துவத்தையும் சிபிசிஐடி யினரிடம் சொல்லிருக்காரு, இதை முட்டுக்கொடுப்போர் மறக்காம ஒரு கல்வெட்டில் எழுதி வச்சுக்கங்க, முடிஞ்சா அந்த கல்வெட்டு பக்கத்துலயே உட்கார்ந்துக்கங்க.தத்துவம் எல்லாம் சொல்லுவாரு சார், ஆனா இவ்வளவு நாளா எங்க இருந்தாருன்னு மட்டும் சொல்லமாட்டாரு, தற்போது கைதிற்கு பிறகு என்ன நிலவரம் அப்படின்னு முழுசா தெரிஞ்சுகிட்டு, அதற்கு தகுந்தாற்போல் கதை வசனம் எழுத சார் டைம் எடுத்துக்கறாரு வேற ஒன்னும் இல்ல...

Aithu Isai
19 hrs · 
ஒரு பெண்ணை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாவா போவீங்க???

முகிலன் வருவதற்கு 2 வாரத்திற்கு முன், என்னை உளவியல் ரீதியாக துன்புறுத்த முகிலன் அல்லக்கைகள் என்னை கேவலமாக சித்தரித்து, ஒரு மொட்ட கடிதத்தை நான் தங்கியிருக்கும் விடுதி உரிமையாளருக்கும் வேறு சிலருக்கும் அனுப்பிருந்துச்சுங்க அதை சிபிசிஐடி யிடம் அப்பொழுதே ஒப்படைச்சாச்சு, கிட்டத்தட்ட எவன்னு கண்டும் பிடிச்சாச்சு...

Aithu Isai
17 hrs · 
இவ்வளவு தைரியமாக பல அவதூறுகளை தாண்டி நிற்பதற்கு காரணம் முகிலன் செய்த துரோகமே, முகிலன் எனக்கு இழைத்த அநீதியே. தனி ஆளாய் எனக்கான நியாயத்திற்காக போராடி அதில் எனது தரப்பில் உண்மையை நிரூபித்தும் இருக்கேன். என் தரப்பு உண்மை தெரிந்த பிறகு நியாயத்தின் பக்கம் பலரும் இப்போது நிற்கின்றனர்.

முகிலன் செய்த துரோகத்தின் வலி தான் இவளை உருவாக்கியுள்ளது, உளவியல் ரீதியாக அத்தனை மன அழுத்தம், மருத்துவசிகிச்சையும் எடுத்துக்கொண்டு எப்படி இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்கொண்டேன்னு எனக்கு தெரியவில்லை, இந்த இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால் முகிலனாலும், முகிலனை சார்ந்தவர்களாலும் ஏற்பட்ட அவமானங்களால் தற்கொலை செய்திருப்பாள், நான் இவ்வளவு உறுதி மிக்கவளா? இவ்வளவு தைரியமானவளா? என்று எனக்கே வியப்பு. என்னிடம் பேசுபவர்கள் உங்க இடத்தில் நாங்க இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்போமா என்று தெரியலைங்கன்னு சொன்னாங்க. அழுது ஒரு மூலையில் உட்காராமல் அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்... முகிலன் இழைத்த அநீதியே என்னை உருவாக்கியது, இதை நான் பலரிடம் சொல்லியிருக்கேன் இவளை உருவாக்கியது முகிலனே என்று, ஆதலால் முகிலனிற்கு நன்றி...

click me!