
பழைய செங்கல்பட்டு மாவட்டம் தற்போதய காஞ்சிபுரத்தில் பாலாற்றங்கரையின் ஓரத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்தவர்தான் இந்த சோ ராமசாமி.
முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், அவரது உறவினர் ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் ஊர்தான் இந்த ஆத்தூர்.
அழகிய இயற்கை அமசங்களை உடைய இந்த கிராமத்தில்தான் சோ பிறந்து வளர்ந்தார். பின்னர் சென்னையில் குடியேறிய அவர் நாடகங்கள் மற்றும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.அதே நேரத்தில் பத்திரிக்கை துறையிலும் முத்திரை பதிக்க தொடங்கினார் சோ.
1970களின் தொடக்கத்திலிருந்தே அரசியல் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி தனது படங்களிலும் நாடகங்களிலும் அக்குவேறு ஆணிவேராக அலசுவார்.
குறிப்பாக ரஜினி பிரபு நடித்த குரு சிஷ்யன் படத்தில் அப்போது திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்பதை தெள்ளதெளிவாக செய்கை மூலம் உணர்த்துவார்
அரசியலில் அடுத்த நாள் என்ன நடக்கும், அடுத்த வாரம் என்ன நடக்கும், அடுத்த வருடம் என்ன நடக்கும், அடுது 10 வருடங்கள் என்ன நடக்கும் என்பதை மிக துல்லியமாக கணிப்பதில் இந்திய நாட்டிலயே சோ ராமசாமிக்கு இணையாக யாருமில்லை என்பதை உறுதியாக கூறலாம்.
அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, வி.பி சிங், மோடி, பிரணாப் முகர்ஜி என சொல்லிக்கொண்டே செல்லும் அளவிற்கு மாநில மற்றும் தேசிய தலைவர்களின் அன்பை மட்டுமல்ல பெரிய மரியாதையும் பெற்றிருந்தார்
சோ ராமசாமியின் அரசியல் அறிவால் பத்திரிக்கையாளர்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டது என்றால் மிகையல்ல.
தீவிர இந்து பற்றாளரான சோ ராமசாமி என்றும் பிற மதத்தினரை காயப்படுத்தியதில்லை. தனது மதத்தை எப்போதுமே விட்டுகொடுக்காத சோ ராமசாமி பாபர் மசூதி இடிப்பை கடுமையாக கண்டித்தார்.
அரசியல் ஆரூடம் கூறுவதில் சோ ராமசமி போன்று இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்