ஜெயலலிதாவின் பெயரும், புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும் - கருணாநிதி புகழாரம்

First Published Dec 6, 2016, 5:01 PM IST
Highlights


அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பெயரும், புகழும் காலத்துக்கும் நிலைத்திருக்கும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். 

அரசியல் களத்தில் இரு துருவங்கள் வர்ணிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் புகழாரம் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்ட போதே அவர் உடல்நலம் நலம் தேற தனது வாழ்த்துக்களை தி.மு.கழக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் ஓவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட மு.கருணாநிதி தொடர்ந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.


இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று இதய செயல் இழப்பால் மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து அறிந்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ கட்சியன் நலன் சார்ந்த, எதிர்கால விஷயங்களுக்காக, ஜெயலலிதா துணிச்சலுடன் எடுக்கும் முடிவுகளுக்கு அவருக்கு நிகர அவரே.

அதில் அவரை குறைத்துமதிப்பிட முடியாது.  ஜெயலலிதா இந்த இளம் வயதில் அவர் மரணத்தை சந்தித்துவிட்டார். அவரின் பெயரும், புகழும் காலத்துக்கும் நீக்கமர நிலைத்து இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தி.மு.கழகத்தின் பொருளாதார மு.க. ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

click me!