திமுக எம்.எல்.ஏக்களில் எத்தனை பேர் ஸ்லீப்பர் செல்கள் தெரியுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு வரட்டும்.. அப்புறம் பாருங்க..! ஷாக் கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி..!

 
Published : Oct 21, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
திமுக எம்.எல்.ஏக்களில் எத்தனை பேர் ஸ்லீப்பர் செல்கள் தெரியுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு வரட்டும்.. அப்புறம் பாருங்க..! ஷாக் கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி..!

சுருக்கம்

sleeper cells in dmk said milk minister rajendhra balaji

திமுக எம்.எல்.ஏக்களில் 40 பேர் தங்களது ஸ்லீப்பர் செல்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதல்வர் பழனிசாமி அணியில்  தனது ஆதரவாளர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாகவும் தேவையான நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் தினகரன் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த அதிமுக ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சிக்கு பிரச்னைகள் வந்தால் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

மேலும் திமுக எம்.எல்.ஏக்களில் 40 பேர் தங்களது ஸ்லீப்பர் செல்கள் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அவர்கள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து திமுகவினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அமைச்சர்கள் சிலர், வாயில் வருவதை எல்லாம் உளறிக் கொட்டுவதை முழுநேர பணியாக செய்துவருகின்றனர். அவர்களின் பேச்சால் அமைச்சர்கள் மீதான மக்களின் மதிப்பீடு குறைந்துகொண்டே வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அபத்தமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி பார்த்துக்கொல்வார் என்றும் திமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளது மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!