ஹிட்லர் ஒரு நாள் அழிந்துபோனார்... பாஜகவுக்கு நினைவுப்படுத்தும் சிவசேனா!

By Asianet TamilFirst Published Nov 10, 2019, 9:27 PM IST
Highlights

தேர்தலில் அதிக இடங்களில் வென்றதாலேயே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவால் முடியாமல் போகும்பட்சத்தில் உடனே சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும்.

அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்குவது ஹிட்லருடைய பாணி. ஆனால், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என்று பாஜகவை சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இதேபோல தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிராஸ் கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக - சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர் இடங்கள் என சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்காததால், தேர்தல் முடிவு வெளியாகி 2 வாரங்களைக் கடந்தவிட்டபோதும் புதிய அரசு அமையவில்லை.
இந்நிலையில் முந்தைய அரசின் பதிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்ததால், நேற்றைய தினம் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் வழங்கினார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைக்க வருமாறு பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுத்தார். 


இதற்கிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக ஹிட்லரை போல செயல்படுகிறது என சிவசேனா எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கடுமையாக சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறுகையில், “தேர்தலில் அதிக இடங்களில் வென்றதாலேயே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவால் முடியாமல் போகும்பட்சத்தில் உடனே சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும். அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்குவது ஹிட்லருடைய பாணி. ஆனால், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார். காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவுக்கு எதிரியும் அல்ல, டெல்லிக்கு மகாராஷ்டிரா அடிமையும் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

click me!