4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்.. குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி.. திமுக ஏமாற்றம்

By vinoth kumarFirst Published Dec 11, 2020, 12:34 PM IST
Highlights

4 முறை ஒத்திவைக்கப்பட்ட  சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார். 

4 முறை ஒத்திவைக்கப்பட்ட  சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார். 

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4  ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுப கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகங்கைக்கு கொரோனா ஆய்வுப்பணிக்கு டிசம்பர் 4ம் தேதி தமிழக முதல்வர் வருகை தந்ததால் அன்றைய தினமும் தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து, இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும், பிற்பகல் 3 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, .சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் செந்தில், அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில், திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு தலா 8 வாக்குகள் கிடைத்து சமநிலையில் முடிந்ததால் மாவட்ட ஆட்சியர் குலுக்குல்  முறைக்கு ஏற்பாடு செய்தார். இந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

click me!