சிவகங்கை: டெண்டர் விடாமலே ஊழலுக்காக நடந்த 2கோடி டெண்டர்... திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் போர்கொடி.!!

By T BalamurukanFirst Published Jun 2, 2020, 7:46 PM IST
Highlights

திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரூ.2 கோடிக்கு பணி ஒதுக்கீடு செய்ததாக திமுக கூட்டணி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
         

திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரூ.2 கோடிக்கு பணி ஒதுக்கீடு செய்ததாக திமுக கூட்டணி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


                               
சிவகங்கை மாவட்டம்.திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ரூ.2 கோடிக்கு பணிகள் நடந்துள்ளதாக திமுக கூட்டணி சார்பில் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன தலைமையில் நடைபெற்றது.  திருப்புவனம் பேரூராட்சி எதிரரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு  பேரூராட்சி நடைபெற்ற ஊழல் குறித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன்.. 
"கொரோனாவால் 144  தடைகள் இருக்கும் போதும் டெண்டர் விடாமல்  முறைகேடு நடந்து உள்ளது.  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை  என்றும் மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருப்புவனத்தில் புல எண் 16/14 என்ற இடத்தில் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று பல பணிகளுக்கு ஆளும் கட்சியினருக்கு சாதகமாக  டெண்டர் விடாமல்  பணி தரமின்றி நடந்துள்ளது. பேரூராட்சிக்கு பொறியாளர் இல்லாத நிலையில் அவசர பணிகளுக்கு ரசீது முறையில் ரூ.10 ஆயிரத்திற்குள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையில்  மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பணிகளை டெண்டர் விடாமல் ரசீது முறையிலேயே மேற்கொண்டுள்ளனர். 


டெண்டர் விடாமல் பணம் எடுப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.  இது உள்ளாட்சி விதிகளுக்கு முரணானது. இதன்மூலம் மக்கள் பணத்தை விரையமாக்கி முறைகேடு நடைபெறுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.

click me!