பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம்……'ஒரு விறுவிறுப்பான திகிலூட்டும் கதை …. சிவசேனா கட்சி செம கலாய் !! '

First Published Jun 13, 2018, 9:11 AM IST
Highlights
siva sena write about modi and Batnavis


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்  தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோரை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவது "ஒரு பரபரப்பான திகிலூட்டும் கதை "என்று சிவசேனா கட்சி செமையாக கலாய்த்துள்ளது. .தேர்தல் வரும்போதெல்லாம் இது போன்ற அச்சுறுத்தல்கள் வெளியாகிறது என்று அக்கட்சி கிண்டல் செய்துள்ளது. .

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான "சாம்னா"தலையங்கத்தில்,முதலமைச்சர்  பட்நாவிஸ்க்கு இரண்டு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்கள் ஒருபுறம் அதிநவீன ஆயுதங்களை வாங்குகிறார்கள் என குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் . மறுபுறம் கொலை சதித்திட்டம் குறித்து ஒரு கடிதம் பாதுகாப்பு ஏஜென்சீயிடம் கிடைக்கும் அளவிற்கு  அவர்கள் அஜாக்கிரதையாக இருந்திருப்பார்களா என கேள்வி எழுப்பட்டுள்ளது.

பிரதமருக்கு ஏற்கனவே இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாத் அளிக்கும் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது .இப்போது மகாராஷ்ட்ரா முதலமைச்சர்  பட்நாவிஸ்க்கும் இதே போன்ற பாதுகாப்பு அளிக்கலாம். வானத்தில் பறக்கும் ஒரு பறவை கூட இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் நுழையமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. .

சாமானிய மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ளும் வகையில் அரசு தலைமைச் செயலகமான மந்த்ராலயாவின் பாதுகாப்பை முதலமைச்சர்  பட்நாவிஸ் பலப்படுத்தி வைத்திருக்கிறார்.  இந்த பின்னணியில்தான் முதலமைச்சரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ...விறுவிறுப்பான திகிலூட்டும் திரைப்பட கதைக்கு சற்றும் குறைந்தது அல்ல என்றும்  பிரதமர் மோடியும் , முதலமைச்சர்  பட்நவீசும் நீண்டகாலம் வாழ வேண்டும் இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்பதில் தங்கள் கட்சிக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் சாம்னா தெரிவித்துள்ளது.

பொதுவாக இது போன்ற கொலைமிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தேர்தல் சமயத்தில் தான் வருவது வழக்கம் ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும்போதே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது  எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரதமரின் பாதுகாப்பு இப்போது இருப்பதை விட அதிகரிக்கப்படுமா? முதலமைச்சர்ல்வருக்கு மொசாத் போன்ற பாதுகாப்பு அளிக்கப்படுமா? இந்த கேள்வியை ஆராயவேண்டும் எனவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

click me!