கருணாநிதியின் வைரவிழாவுக்கு பலம் கூடுகிறது - சென்னைக்கு சீனாக வருகிறார் சீதாராம்!!!

First Published May 18, 2017, 5:32 PM IST
Highlights
sitaram yechury will participate in karunanidhi birthday


சென்னையில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதியின் வைர விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்க உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி சட்டப்பேரவையில் தொடர்ந்து 60 ஆண்டுகள் உறுப்பினராக உள்ளதை வைர விழாவாக அக்கட்சி கொண்டாடுகிறது.

ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் வைரவிழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக நிகழ்ச்சியை பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமாக உச்சத்திலும் உச்சமாக கொண்டாட திமுக நிர்வாகிகள், வேட்டியை மடித்துக் கொண்டு தீயாக வேலை செய்து கொண்டுள்ளனர்.

வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் மறுத்ததாக தகவல் வெளியானது. போதாத குறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடல் நிலையை காரணம் காட்டி விழாவில் கலந்து கொள்ளவதில் சிக்கல் என்று கூறிவிட்டார்.

கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க தேசியத் தலைவர்கள் என்ற  இந்த ஒன்லைனை வைத்துக் கொண்டு திமுகவை நெட்டிசன்கள் வகைதொகையாக கிண்டல் அடித்தனர்.

ஆனால் இதனை ஜஸ்ட் லைக் தட்டாக சிறிதும் பொருட்படுத்ததாக திமுக இடதுசாரி கட்சிகளில் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை பங்கேற்க வைத்துள்ளது.

கருணாநிதியின் 60 வது வைர விழாவில் தேசியத் தலைவர்கள் பங்கேற்க மறுப்பது திமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக திமுக உடன்பிறப்புகளை கொம்பு சீவி ஜல்லிக்கட்டு என்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்தும் போர் ஒத்திகை.

click me!