பாடகர் எஸ்பிபிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்..தாமரைப்பாக்கம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!

By T BalamurukanFirst Published Sep 25, 2020, 10:58 PM IST
Highlights

தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு உதவிகளை செய்த வந்த எஸ்பிபியின் மரணம் பேரிழப்பு என கிராம மக்கள் வேதனை தெரிவித்ததோடு அங்கே மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு உதவிகளை செய்த வந்த எஸ்பிபியின் மரணம் பேரிழப்பு என கிராம மக்கள் வேதனை தெரிவித்ததோடு அங்கே மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி அவர்களுக்கு சொந்தமான 14 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு அமைந்துள்ள பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.கொட்டும் மழையிலும் ஜேசிபி இயந்திரம் மூலம்தென்னை மரம் மற்றும் மாந்தோப்பில் உடலை அடக்கம் செய்வதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சீரமைக்க தொடர்ந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் இங்கு உள்ள சுடுகாட்டின் அருகே அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே இவருடைய மாமியார் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதேபோன்று இவரின் உடலும் இங்கு அடக்கம் செய்யபட உள்ளதாகவும் இங்கு பணியாளர்கள் 6 பேர் பணிபுரிந்து வருவதாகவும் தொடர்ந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு உதவிகளை செய்து வந்த எஸ்.பி.பி.யின் உயிரிழப்பு கிராம மக்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் அவரை இழந்து வாடும் அப்பகுதி மக்கள் இப்பகுதியில் அவருடை மகன் சரண் மணிமண்டபம் கட்ட வேண்டும் அதற்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்..

click me!