
மத்திய அமைச்சர் பேச்சு:
காங்கிரஸ் பலவீனமடைந்துள்ள நிலையில், மாநில கட்சிகள் காங்கிரஸ் இடத்தை பிடிக்க முயல்வதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இது ஜனநாயகத்திற்கு நல்லத்தல்ல என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.லோக்மத் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் பலவீனமடைந்துள்ள நிலையில், மாநில கட்சிகள் காங்கிரஸ் இடத்தை பிடிக்க முயல்வதாக கூறினார். மேலும் இது ஜனநாயகத்திற்கு நல்லத்தல்ல. எனவே, ஜனநாயகத்திற்கு வலுவாக எதிர்க்கட்சி தேவை என்று பேசினார். ஜனநாயகம் என்பதும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனும் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது.
காங்கிரஸ் பலவீனம்:
காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துவதாக தெரிவித்த அமைச்சர், தோல்வியை கண்டு விரக்தி அடையாமல், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார். தோல்வி ஒரு நாள் உண்டு என்றால் வெற்றியும் ஒரு நாள் உண்டு என்று அறிவுறுத்திய அவர், இது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு சரியான உதாரணம். ஏனென்றால், மக்களவை தேர்தலில் வாஜ்பாய் தோல்வியடைந்தபோது, நேரு அவருக்கு மரியாதை அளித்தார் எறார்.
எனவே, ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் தோல்விகளால் விரக்தி அடையாமல், நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜக 2 இடங்களை மட்டுமே பெற்று இருந்த போது கூட நம்பிக்கை தளராமல், கட்சித் தொண்டர்களின் அயராத முயற்சியால் பாஜக வெற்றி பெற்று வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார் என்று குறிப்பிட்டார்.
மாநில கட்சிகளின் ஆதிக்கம்:
இந்த பேச்சின் பின்னணியில், 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே நிதின் கட்காரி இவ்வாறு காங்கிரஸ் கட்சி மீண்டெழ மனபூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறாரோ என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.தற்போது அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஹிமாச்சல், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. அசாம், பிஹார், ஹரியாணா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் கோவா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ,மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.