கொரோனா மருந்துக்காக கூவி கூவி அழைத்த 'சித்த வைத்திய சிகாமணி' திருதணிகாச்சலம்... தாவித் தாவி ஓடி தலைமறைவு..!

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 11:33 AM IST
Highlights

கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூவி கூவி அழைத்த போலி சித்த மருத்துவர் திருதணிக்காசலம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளார்.  
 


கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூவி கூவி அழைத்த போலி சித்த மருத்துவர் திருதணிக்காசலம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளார்.  

கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றம் ஓமியோபதித் துறையால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு,  அரசு நடவடிக்கை மேற்கொண்டது.  இந்நிலையில் சித்தமருத்துவர் தணிகாசலம் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!