ஜெ. மரணம் பற்றி ஓ.பி.எஸ்.-ஐ விசாரித்தால் போதுமே....! திண்டுக்கல் ஐ.லியோனி

First Published Jun 26, 2018, 1:00 PM IST
Highlights
Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone


திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் கூட்டம் தேனி, பெரிய குளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர்
திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தலைமையில் நம்பிக்கையில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லாப்பெட்டி பழனிசாமியாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெருக்கூத்து பன்னீர்செல்வமாகவும் சகல இடங்களுக்கும் தகுந்தவாறு வேடமணிந்து நடித்து கொண்டிருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டராக இருந்த பன்னீர்செல்வம் கான்ஸ்டபிளாகவும், கான்ஸ்டபிளாக இருந்த எடப்பாடி இன்ஸ்பெக்டராகவும் ஆனதுபோல் பதவி மாறி உள்ளனர்.
எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி என்று பயந்து கொண்டே ஆட்சி நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணையில், வேறு யாரையும் விசாரிக்காமல், ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும்
விசாரித்தார் ஜெ. மரணம் குறித்த விபரம் தெரியவரும் என்றார்.

ஏனென்றால் அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவருக்கு தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் நடந்திருக்காது. எனவே அவர் ஒருவரை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று கூறினார்.

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை என்று கூறி 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, அதில் 3 ஆயிரம் கோடி கமிஷன் பெறுவதற்காக, ஏழை
விவசாயிகள் வயிற்றில் எடப்பாடி பழனிசாமி அடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மக்களுக்கு எதிராக தீட்டப்படுகின்ற எந்தவொரு திட்டங்களையும்
செயல்படுத்தக் கூடாது என்றும் ஐ.லியோனி கூறினார்.

click me!