காமராஜர் பெயரை சூட்டுங்கள்... டி.டி.வி.தினகரன் கோரிக்கை..!

Published : Mar 10, 2020, 02:14 PM IST
காமராஜர் பெயரை சூட்டுங்கள்... டி.டி.வி.தினகரன் கோரிக்கை..!

சுருக்கம்

சென்னை விமான நிலையத்தில்  உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில் உடனடியாக கர்மவீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச் செய்யவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கெட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில் உடனடியாக கர்மவீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச் செய்யவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கெட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கோரிக்கையில், ’’சென்னை விமான நிலையத்தில் மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தமளிக்கிறது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி உள்நாட்டு முனையத்தின் பெயர்ப்பலகையில் உடனடியாக கர்மவீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச்செய்யவேண்டும். பெருமைக்குரிய பொது வாழ்க்கையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த காமராஜருக்கு அது மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

மேலும் உள்நாட்டு விமானங்களுக்குள் செய்யப்படும் அறிவிப்புகளிலும் 'காமராஜர் முனையம்' என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!