கோழிகளுக்கு ஆப்பு வைத்த கொரோனா...!! வாயில் வயிற்றில் அடித்துக்கொள்ளும் பண்ணையாளர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2020, 2:04 PM IST
Highlights

அதேநேரம் கறிக்கோழிகள் மூலம் கொரோனா பரவும் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது .  இதனால் கோழிக்கறி வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் .

கொரானா பரவும் என்ற வதந்தியால் தமிழ்நாட்டில் கறிக்கோழி விலை கடுமையாக சரிந்துள்ளது  கோழி பண்ணை உரிமையாளருக்கு நாளொன்றுக்கு 500 கோடி நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது .  இந்த வைரஸ் இந்தியாவையும்  தாக்க தொடங்கியுள்ளது .  இந்த வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இந்நிலையில் கேரளாவில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக தமிழ்நாட்டில் ப்ராய்லர் பண்ணை மற்றும் கறிகோழிகளின்  விலை கடுமையாக சரிந்துள்ளது. 

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கோழிகள் 25% அளவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது ,  பறவை காய்ச்சல் காரணமாக பண்ணை கோழிகளின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூபாய் 25 குறைந்துள்ளது .  இதற்கு முன் பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ ரூபாய் 80 ஆக இருந்தது . இந்நிலையில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் உள்ள பண்ணைகளில் இருந்து கோழிகள் அழிக்கப்பட்டுவிட்டன.  அதேநேரம் கறிக்கோழிகள் மூலம் கொரோனா பரவும் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது .  இதனால் கோழிக்கறி வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் . இதனால் விற்பனை படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. 

இதனால் கோழி  பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் . கோழிப்பண்ணை கேந்திரமாக உள்ள ஈரோடு , நாமக்கல் , கோவை திருப்பூர் உள்ளிட்ட ஏற்கனவே கோடை வெப்பம் மற்றும் கிருத்துவர்களின் தவக்கால நோன்பு காரணமாக கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் கறிக்கோழி விற்பனை முற்றிலும் சரிந்துள்ளது.  கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் காரணமாக தென்மாநிலங்கள் முழுவதும் கோழி கறி மற்றும் முட்டை விற்பனை மந்தமடைந்துள்ளது. 

 

 

click me!