ஆட்டத்தை ஆரம்பித்த அமித்ஷா... முடித்து வைத்த சவுகான்... ஆட்சி பறிபோகும் பயத்தில் கதறும் காங்கிரஸ்..!

By vinoth kumarFirst Published Mar 10, 2020, 1:28 PM IST
Highlights

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். டெல்லியில் அமித்ஷா, பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். 

இந்நிலையில், மத்தியப் பிரதேச அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தனி விமானத்தில் பெங்களூரூ சென்றனர். இவர்கள் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதனால், மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காங்கிரஸ் அதிருப்தி தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. 

இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். இனிமேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் எதுவும் செய்ய முடியாது என நம்புகிறேன் என்றார். இவரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் ராஜினாமா செய்தால் மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!