சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான்; விரைவில் தேர்தல் நடத்தப்படும் - பல்டி அடித்த தம்பிதுரை...

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான்; விரைவில் தேர்தல் நடத்தப்படும் - பல்டி அடித்த தம்பிதுரை...

சுருக்கம்

Shashikala temporary potucceyalalartan The election will be held soon - retracted tampiturai

சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான் எனவும், விரைவில் பொதுச்செயலாளருக்கான தேர்வு நடத்தப்படும் எனவும் துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிளவடைந்தது.

இதையடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்த கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பினர் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது எனவும், அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற முறையே இல்லை என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

இதற்கான விளக்கங்களும் கோரிக்கைகளும் நிறைவு பெற்ற நிலையில், வரும் 20 ஆம் தேதிக்குள் சசிகலா நியமனம் குறித்து இறுதி முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் இரட்டை இல்லை சின்னம் தங்களுக்கு ஒதுக்குவது குறித்தும் ஒ.பி.எஸ் தலைமையிலான அணியினர் நேற்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து பேசினர்.

இந்நிலையில், சசிகலா தரப்பு ஆதரவாளரான தம்பிதுரை தலைமையிலான 10 பேர் அடங்கிய குழு இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது சசிகலா நியமனம் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மனு அளித்தனர்.

இந்த சந்திப்பையடுத்து தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது பற்றி ஆவணங்களை தேர்தல் ஆணையங்களிடம் அளித்துள்ளோம்.

ஜெயலலிதாவையும் அதிமுக பொதுக்குழு தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தோம்.

இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் அணி கேட்பது நியாயமல்ல.

அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை.

சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.   

PREV
click me!

Recommended Stories

திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!