
2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 1.5 லட்சம் ஏழை பெண்களுக்கு 6 லட்சம் ஆடுகள், 12 ஆயிரம் கறவை மாடுகள் வாங்க ரூ.182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களான காங்கேயம், பர்கூர், உம்பளாச்சேரி இன மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மேலும் உள்ளூர் இனமான புலிகுளம் மற்றும் ஆலம்பாடி பேன்ற இதர இனங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2017-18 ஆண்டில் 25 கால்நடை கிளை மையங்கள் தரம் உயர்த்தப்படும், புதிதாக 25 கால்நடை கிளை மையங்களும் அமைக்கப்படும்.
மதுரையில் 40 கோடி செலவில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளவு திறன் கொண்ட நறுமன பால் தயாரிக்கும் மற்றும் புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.
2017-18 நிதிஆண்டில் ஏழை பெண்களுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்களும், 1.50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும்.
சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும்.
உணவு மானியம்,மின்சார மானியம்,கல்வி உதவி தொகைகள்,வீட்டுவசதி திட்டங்கள், விவசாய கடன் தள்ளுபடி, வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு மானியங்கள் மற்றும் உதவித்தொக்கைகளுக்கு ரூ.72,616 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.