சின்ன வயதில் செய்த சில்மிஷம்...!! பிடனுக்கு தலைவலியாய் வந்த பாலியல் புகார்..!!

By Ezhilarasan BabuFirst Published May 2, 2020, 12:34 PM IST
Highlights

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட உள்ள முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பிடன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது , 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட உள்ள முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பிடன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது ,  ஆனால் இது திட்டமிட்டு என் மீது வைக்கப்படும் பொய் குற்றச்சாட்டு என அவர் மறுத்துள்ளார் ,  உலகம் முழுக்க கொரோனா வைரஸ்  பரவி பேரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது, இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர்-3  தேதி நடைபெற உள்ளது .  இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பும்  ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும்  போட்டியிடவுள்ளனர் . இந்நிலையில்  டொனால்ட் ட்ரம்ப் க்கு எதிராக அந்நாட்டில் எதிர்ப்பு அலை வீசுவதால் ஜோ பிடனுக்கு அமெரிக்காவில் ஆதரவு பெருகி வருகிறது. 

அமெரிக்க மக்கள் மத்தியில் ஜோ பிடன் பிரபலமடைந்து வரும் இந்நிலையில்  அவர் மீது திடீர் பாலியல் புகார் எழுந்துள்ளது .  கடந்த 1993 ஆம் ஆண்டு  தன்  உதவியாளரை பிடன்  பாலியல் வன்கொடுமை  செய்தார் என்பதுதான் அது . அதாவது,  ஜோ பிடன் செனட் உறுப்பினராக இருந்தபோது கடந்த 1992  டிசம்பர்  முதல்  1993  ஆகஸ்டு  வரை  அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்  " ரீட்  " ,  இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆவார் ,  இவர் 1993 ஆம் ஆண்டில் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  ஜோ பிடன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார் ,  அதாவது பிடனுடன்  தான் தனிமையில் இருந்தபோது பிடன் தன்னுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்பதுதான் அது 

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு  பிடன் பற்றிய அதிர்ச்சிகர சம்பவங்கள் என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பெண்   " ரீட்  " டின் நண்பர்களை பேட்டி கண்டு செய்தி வெளியிட்டிருந்தன , இதுகுறித்து  " ரீட்  "  அது  மட்டுமன்றி 1990 ஆம் ஆண்டு பிசினஸ் இன்சைடர் என்ற இணையதளத்திலும்   தன் உதவியாளரை பிடன்  பாலியல் வன்கொடுமை செய்தார் என செய்தி வெளியாகியிருந்தது ,   தற்போது இந்தச் செய்திகளை ஆதாரமாக வைத்து அமெரிக்காவின் ஜோ பிடனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது .  இந்நிலையில் தன் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு  பிடன் மறுப்பு தெரிவித்துள்ளார் .   அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அவர் மறுத்துள்ளனர். 

இதுகுறித்து  சமீபத்தில் அவரிடம் நேர்காணல் கண்ட செய்தியாளர் ஒருவர்,  நீங்கள் உங்கள் உதவியாளரை பாலியல் கொடுமை செய்தீர்களா எனக் கேட்டதற்கு... இல்லை அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ,  அப்படி என்றால் என் மீது செனட் தேசிய ஆவண காப்பகத்தில் புகார் ஏதாவது பதிவாகி இருக்கிறதா என பாருங்கள்.  என்மீது அது போன்ற எந்தப் பெண்ணாவது புகார் கொடுத்திருக்கிறாரா என செனட் ஆவன காப்பகத்தை கேளுங்கள்.  நான் செனட்  உறுப்பினராக இருந்த வரையில் என் மீது ஏதாவது  ரகசிய புகார்கள் வந்திருக்கிறாதா என்பதற்கான ஆதாரத்தை வெளியிடச் சொல்லுங்கள்  என அவர் கொந்தளித்துள்ளார்.  இந்நிலையில் அவர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து நியூயார்க் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் அவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவரின் உதவியாளர்களை பேட்டி கண்டது இதில் 56 வயதான " ரீட்  "  ஊடக நேர்காணலில் தனக்கு பிடனால்  நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆம் என பதில் அளித்துள்ளார். 

ஆனால் அவருடன் பணியாற்றிய மற்ற இரு பெண்கள் அதுபோன்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை என மறுத்துள்ளனர்,  இதில்  மரியான் பேக்கர் என்ற உதவியாளர் நான் அவரிடம் பணியாற்றிய 20 ஆண்டுகளில் ஒருபோதும் இதுபோன்ற எந்த ஒரு புகாரும் இல்லை என மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிடன்  கட்டிப்பிடித்தார் முத்தமிட்டார் அல்லது தங்களை தொந்தரவு செய்தார் என்று சொல்ல முன்வந்த எட்டு பெண்களில்  " ரீட்  " ஒருவராக இருந்தார் .  ஆனால் அதில்  யாரும் அவர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டவில்லை , இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் போட்காஸ்டில் தான் தாக்கப்பட்டதாக  " ரீட்  " பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இந்நிலையில்  சில முக்கிய பெண் அமைப்புகள்  ஜோ பிடனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வந்துள்ளனர் . பிடன் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில்  தெரிவிக்கும் இக்குற்றச்சாட்டை  உடனே திரும்பப் பெற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  
 

click me!